இன்றைய போட்டியிலும் சந்திமால் விளையாடமாட்டார் : லசித் மலிங்கவே தலைவர்!!

449

Sandimal

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இன்று இடம்பெறவுள்ள 20 ஓவர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிக்கும் லசித் மலிங்கவே தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கை அணியின் T20 அணித் தலைவர் தினேஷ் சந்திமால் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவன முகாமையாளர் அறிவித்துள்ளது.

பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டில் நியூசிலாந்து அணியுடனான போட்டியில் விளையாட சந்திமாலுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்போட்டிக்கு லசித் மலிங்க தலைமை தாங்கி நிலையில் அணி ஆபார வெற்றியீட்டியது.

அத்துடன், தினேஷ் சந்திமால் பங்குபற்றி அண்மைய போட்டிகளை நோக்கின் அவரது திறமை பெரிதாக வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.