ஷிராந்தி ராஜபக்ஷவின் பெயரைச் சொல்லி நிதி மோசடி செய்த பெண் கைது!!

561

A1ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். குறித்த பெண் இரண்டு லட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிலாபத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அனுமதி பெற்றுக் கொடுப்பதாகத் தெரிவித்து தரம் ஒன்று மாணவியொருவரின் பெற்றோரிடம் இவ்வாறு நிதி மோசடி செய்துள்ளார்.

ஜனாதிபதியின் பாரியாருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியே ராகம வரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.