அனைத்து வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பம் : திகதி வெளியானது!!

2235

கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்..

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் திகதி வெளியானது. இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி குறித்த வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னதாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் இவ்வாறு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.