இலங்கையில் நாளை முதல் பூஸ்டா் தடுப்பூசிகள்!!

1351

தடுப்பூசி..

இலங்கையின் கோவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி நாளை முதல் வழங்கப்படவுள்ளது. சுகாதாரப்பணிப்பாளா் அசேல குணவா்த்தன இதனை தொிவித்துள்ளாா்.

இதன் முன்னுரிமை அடிப்படை பின்பற்றப்படும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா். சுகாதாரத்துறை முன்னிலைப் பணியாளா்கள், மற்றும் முப்படையினருக்கு இந்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இதன்பின்னா் 60 வயதுக்கு மேற்பட்ட சுகவீனமடைந்துள்ளவா்கள், மற்றும் 30வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவா்கள் இறுதியாக 20வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இந்த மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அசேல குணவா்த்தன தெரிவித்துள்ளார்.

இதுவரை தடுப்பூசிகளை செலுத்தி 6 மாதங்கள் கடந்தவா்களுக்கு மூன்றாவது அளவாக பைஸா் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.