தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்திய அணி!!

449

Ind

T20 உலக கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரையிறுதிச்சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

நேற்று நடந்த இதன் இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்தது.

இந்த அணியின் அணித்தலைவர் டு பிளெஸ்சிஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து 58 ஓட்டங்களும், டுமினி 45 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 173 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.1வது ஓவரில் 176 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வீராத் கோலி வழக்கம் போல் அபாரமாக அரைசதம் கடந்து 72 ஓட்டங்கள் அடித்து இந்தியாவின் உலகக்கிண்ண இறுதிச்சுற்று வாய்ப்பை தக்கவைத்தார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் பலப் பரீட்சை நடத்தவுள்ளன.