பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய பிரதான சந்தேகநபர்!!

1387

சப்புகஸ்கந்த..

சப்புகஸ்கந்த பகுதியிலிருந்து அண்மையில் பயணப்பையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான கணவன், மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து குறித்த பிரதான சந்தேகநபர் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை பிரதான சந்தேகநபரிடமிருந்து, படுகொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் உலக்கை, சடலத்தை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனம் என்பவற்றை மீட்டுள்ளதாக சப்புகஸ்கந்த பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.