நாம் அனைவரும் மனிதர்கள் : அவுஸ்ரேலிய அணியை கடுமையாக சாடிய பிராவோ!!

508

Bravo

பாகிஸ்தானை கடைசி 5 ஓவர்களில் புரட்டி எடுத்து பிறகு முதல் 6 ஓவர்களில் அந்த அணியை போட்டியிலிருந்தே விலக்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் கொண்டாட்டங்கள் பெரிதாக இல்லை.

ஆனால் அவுஸ்ரேலியாவை வீழ்த்தியபோது மேற்கிந்திய தீவுகள் அணி நடனம், கூத்து என்று கடுமையாக கொண்டாட்டங்களை வெளிப்படுத்தியது. இதற்குக் காரணம் இவ்வாறு கூறுகிறார் மேற்கிந்திய தீவுகளின் வைன் பிராவோ.

அவுஸ்ரேலியா வென்றால் நாங்கள் பொங்கி விடுவோம், காரணம் உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன், அந்தப் போட்டி எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டி, நாங்கள் எங்களுக்கே எங்களை நிரூபித்துக் காட்டுவதிலும், அவுஸ்ரேலியர்களுக்கும் சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கவும் தீவிரம் காட்டினோம்.

அதாவது முடிவில் நாம் கிரிக்கெட் வீரர்கள், நாம் அனைவரும் மனிதர்கள். நாம் இந்த ஆட்டத்தை ஆடுகிறோம், நாம் ஒருவரை ஒருவர் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். குழந்தைகள், சிறுவர்கள் நாம் ஆடும் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கின்றனர்.

நாம் ஒழுங்காக நடந்து கொள்ளவேண்டும், ஆனால் அவுஸ்ரேலியர்கள் ஏதோ தாங்கள்தான் இந்த மண்ணில் கிரிக்கெட் ஆடவே பிறந்தவர்கள் போல் எதிரணியினரை வசை பாடுகின்றனர், குரோதத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மேற்கிந்திய தீவுகள் என்ற அணியை வசைபாடுவதை அவர்கள் தவிர்க்கவே இந்த தோல்வி அவர்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் எங்கள் முகத்தில் புன்னகையுடன் ஆடுகிறோம், நியாயமாக ஆடுகிறோம், நாங்கள் தோற்கிறோம், ஜெயிக்கிறோம் அதெல்லாம் ஒன்றுமில்லை.

அவுஸ்ரேலியர்கள் இந்தத் தொடரில் என்ன பெற்றார்களோ அதற்கு அவர்கள் தகுதியானவர்களே.

இந்தியாவுடனான போட்டிகளைப் பாருங்கள் ஒரு அணி ஆடுவதுபோல்தான் இருக்கும், நட்பும் புன்னகையும் தவழும். இதற்கு ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு நன்றி கூறவேண்டும். பணத்தை விடுங்கள், பணத்தை மீறி இருவேறு கலாச்சாரத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஒருங்கிணைப்பதில் ஐபிஎல். கிரிக்கெட்டின் பங்கு அபரிமிதமானது என்று பொறிந்து தள்ளியுள்ளார் பிராவோ.