கோச்சடையானில் பாடி அசத்திய லதா ரஜினிகாந்த்!!

435

Lathaரஜினி-தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் கோச்சடையான். இப்படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார். மோஷன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்தை எடுத்துள்ளார் சௌந்தர்யா.

இப்படத்தின் ஓடியோ வெளியீடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இப்படத்தில் ரஜினி ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்தும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

மணப்பெண்ணின் சத்தியம் என்ற பாடலை அசத்தலாக பாடியுள்ள லதா பற்றி சௌந்தர்யா கூறுகையில், பாடுவதற்கு எப்போதுமே அவர் பேரார்வம் கொண்டவர். அவர் நல்ல திறமையான பாடகியும் கூட, அவர் பாடிய இந்த பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

எந்தவித பயிற்சியும் இல்லாமல் வியப்பூட்டும் வகையில் பாடி அசத்திவிட்டார். இனி மேலும் அவர் தொடர்ந்து பாடுவார் என்று நம்புகிறேன். இந்த பாடல் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பாடல். தெலுங்கிலும் இப்பாடலை அவரே பாடியுள்ளார் என்று சௌந்தர்யா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.