தங்கத்தின் விலை..

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக சந்தையின் தங்கத்தின் நிலவரம் தொடர்பில் புதிதாக வெளியான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலர்களை கடக்கவுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த அதிகரிப்பு மிக சிறிய காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் தங்கம் ஒரு அவுன்ஸ் 1863.40 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.





