ஐஸ்வர்யாவின் திடீர் முடிவால் அதிர்ச்சியில் அமிதாப் குடும்பம்!!

527

Amirtap Pachan

ஐஸ்வர்யாராய் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என அவரது மாமியார் ஜெயா பச்சான் தடைவிதித்திருந்த போதிலும், அதையும் மீறி அவர் மணிரத்னம் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதனால் அமிதாப் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மணிரத்னம் அடுத்த இயக்க உள்ள உளவாளி படத்தில் நாகார்ஜுனா, மகேஷ்பாபு, ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்க ஜெயா பச்சன் எதிர்ப்பு தெரிவித்ததால், மணிரத்னம், கரீனா கபூருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாராய், ஜெயாபச்சனின் எதிர்ப்பையும் மீறி மணிரத்னம் படத்தில் நடிக்க கால்ஷிட் கொடுத்துவிட்டார். இதை மணிரத்னம் மனைவி சுஹாசினி உறுதி செய்துள்ளார். ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்க இருப்பது அமிதாப் குடுபத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை ஆராத்யாவை வீட்டில் இருந்து ஐஸ்வர்யாராய் கவனித்து கொள்ள வேண்டும் என்று அமிதாப் குடும்பத்தினர் விரும்பினர். ஆனால் அவர் மீண்டும் நடிக்க இருப்பதால் அவர்கள் வருத்தம் அடைந்துள்ளதாக மும்பை பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.