கடவுளுக்கு நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய இளம் பெண்ணால் பரபரப்பு!!

615

tongueமத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு, மொரொனா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் மிகவும் பிரபலம். தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு நடத்தி காணிக்கை செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று ரிங்கி நவ்ராரியா 18 என்ற பெண் கோவிலுக்கு வந்தார். கோவிலை மூன்று முறை சுற்றி வந்த அவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தன் நாக்கை வெட்டி, கடவுளுக்கு காணிக்கை செலுத்தினார்.

பின் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, பொலிசார் கூறுகையில் அந்த பெண், பிண்ட் மாவட்டத்தை சேர்ந்தவர். நீண்ட காலமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடவுளுக்கு நாக்கை காணிக்கையாக செலுத்தினால் நோய் தீரும் என யாரே ஒருவர் கூறியதை நம்பி இவ்வாறு செய்துள்ளார் என்றனர்.