வவுனியாவில் புகையிரம் மோதி குடும்பஸ்தர் மரணம்!!

3225

ஈரப்பெரியகுளம் பகுதியில்..

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (10.12) மாலை 5.05 இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற உத்தரதேவி புகையிரதமானது வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பயணித்த போது புகையிரத தண்டவாளத்தில் ஒருவர் தலையை வைத்து படுத்திருந்த நிலையில் அவர் மீது புகையிரதம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா ரவி (வயது 56) ஆவார். இவரது சடலத்திற்கு அருகில் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டு அது பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சடலமும் வவுனியா புகையிரத நிலையம் கொண்டு வரப்பட்டு புகையிரத திணைக்கள அதிகாரிகளால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பலம் தொடர்பல் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.