இலங்கையர்களுக்கு நான்காவது தடுப்பூசியா? சுகாதார அமைச்சின் தகவல்!!

1022

தடுப்பூசி..

எதிர்காலத்தில் நான்காவது கோவிட் தடுப்பூசியையும் வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பொதுமக்கள் தடுப்பூசி அட்டையை இயன்றளவு கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது பொதுமக்களுக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-