வவுனியா நெடுங்கேணியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் வீதியில் பெண்ணின் சடலம் மீட்பு!!

3807

நெடுங்கேணியில்..

வவுனியா நெடுக்கேணிபகுதியில் இன்று மதியம் சூட்டு காயங்களுடன் வீதியில் பெண்ணின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,



நெடுங்கேனி சேனைப்பிளவு பகுதியில் மோட்டார் சைக்கிளிலுடன் வீதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 31 வயதுடைய பெண் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இனந்தெரியாத நபர்கள் வீதியில் மோட்டார் சைக்கிலில் பயணித்த பெண் மீது கட்டுத்துப்பாக்கியால் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டு தப்பித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை நிலவுகின்றது.