
இந்திய மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் சாகும் தருவாயில் என்னை காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
பீகார் மாநிலம் அவரங்காபாத்தில் நக்சலைட்டுகள் தாக்குதலில் படுகாயமுற்ற மத்திய சி.ஆர்.பி.,எப் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் வீரர் ஒருவர் அளித்த பேட்டி ஊடகங்களில் ஒளிரபரப்பாகி மத்திய அரசின் அலட்சியத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
இந்த தாக்குதலில காயமுற்று துடித்த இந்திரஜித் குமார் சிங் அளித்த பேட்டியில், நான் அடிபட்டு கிடக்கிறேன். எனது ரத்தம் முழுவதும் வெளியேறி வருகிறது. மருத்துவர்கள் யாரும் இல்லை, முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.
என்னை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஒரு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தப்படுகிறதே, என்னை காப்பாற்ற யாரும் வரவில்லை, எனது டி.ஜி.,க்கு தகவல் தெரிவியுங்கள், எனக்கு 2 குழந்தைகள் உள்ளன என்றும் நான் பிழைக்க மாட்டேன், பிரதமர், உள்துறை அமைச்சர் என்னை காப்பாற்ற முயற்சி செய்யவும் என வலியுடன் கதறியுள்ளார்.
ஆனாலும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் அவர் கூறியது போலவே இந்த உலகத்தை விட்டு பிரிந்து விட்டார்.
இதுகுறித்து மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது. எல்லையில் போராடிய வீரர் உரிய சிகிச்சை இல்லாமல் கொல்லப்பட்டுள்ளார். தற்போது உயர்மட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.




