உதட்டு முத்தத்தால் லட்சுமிமேனனை ஓட வைத்த தமிழ் சினிமா!!

593

Laxmi menonகேரளத்தில் இருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் எடுத்த எடுப்பிலேயே தமிழுக்கு வந்து விடுவதில்லை. அங்கு இரண்டொரு படங்களில் நடித்து ஓரளவு தேர்ச்சி பெற்ற பிறகே தமிழுக்கு வருவார்கள். அப்படித்தான் கும்கி நாயகி லட்சுமிமேனனும் இரண்டு மலையாளப் படங்களில் நடித்து விட்டுத்தான் தமிழில் கும்கி படத்தில் நடித்தார்.

ஆனால் அதன்பிறகு தாய்மொழியான மலையாளத்தை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு தமிழில் செம பிஸியாகி விட்டார். இந்தநிலையில், தமிழில் நான் சிகப்பு மனிதனில் உதட்டு முத்த நடிகை என்ற சர்ச்சையில் சிக்கிய பிறகு, இனி தமிழில் முழுநேர நடிகையாக இருந்தால் படத்துக்குப்படம் உதட்டு முத்தக்காடசி வைத்து தனது உதட்டை புண்ணாக்கி விடுவார்கள் என்கிற பயம் இப்போது அவருக்கு வந்துவிட்டதாம்.

அதனால் இதுவரை தாய்மொழி படங்களை திரும்பிகூட பார்க்காத லட்சுமிமேனன். இப்போது மலையாளத்தில் ஜோஷி இயக்கத்தில் திலீப் நடிக்கும் அவதாரம் என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் எல்ஐசி ஏஜென்டாக நடிக்கும் லட்சுமிமேனன் குடும்பத்தை தனது முதுகில் சுமக்கிற ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

அதோடு இன்னும் கொஞ்சம் நாளைக்கு தமிழை ஓரங்கட்டினால்தான் இந்த முத்த இமேஜ் மறையும் என்பதால் அடுத்தடுத்து மலையாளத்தில் நடிபதற்காக சில இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம் லட்சுமிமேனன்.