மயிரிழையில் உயிரைக் காப்பாற்றிய கைப்பேசி!!

510

Mobile

மும்பையை சேர்ந்த பாப்பு, சட்டைப் பொக்கெட்டில் வைத்திருந்த கைப்பேசியால் கொலையாளிகளின் துப்பாக்கி சூட்டிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார்.

கோவாண்டி பகுதியை சேர்ந்த பாப்பு காலியா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது இரண்டு குண்டர்கள் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுள்ளனர்.

அதில் ஒரு குண்டு பாப்பு காலியாவின் தொடையில் பாய்ந்துள்ளது. அதிஷ்டவசமாக பாப்பு தனது பொக்கெட்டில் கைப்பேசி வைத்திருந்ததால் மற்ற குண்டு கைப்பேசியில் பாய்ந்து அவருக்கு சிறிய காயமே ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாப்பு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

சிகிச்சையை அடுத்து அவர் பதிவு செய்த வழக்கை விசாரித்த பொலிசார் சி.சி.டி.வி. காணொளி பதிவுகளை கொண்டு மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.