உலகக் கிண்ண T20 கிரிக்கெட் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணிக்கு இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
வலைப் பூ தளத்தில் அவர் தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.
அமிதாப்பின் வாழ்த்துச் செய்தி..
இந்திய அணி போட்டியில் தோல்வியடைந்தமை ஏமாற்றத்தை தருகிறது, எனினும் உலகின் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றான இலங்கையிடமே நாம் தோல்வியடைந்தோம். எமது அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றமை பெருமைக்குரிய விடயம். இலங்கை அணிக்கு எனது வாழ்த்துக்கள்.