ஐபிஎல் மூலம் எனது திறமையை நிரூபிக்கத் தேவையில்லை : கெவின் பீட்டர்சன் ஆவேசம்!!

467

Peterson

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது திறமையை ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் நிரூபிக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இழந்ததால் அந்நாட்டு கிரிக்கெட் சபை சிறந்த அதிரடி துடுப்பாட்டக்காரரான கெவின் பீட்டர்சனை நீக்கியது. T20 உலகக்கிண்ணப் போட்டிக்கான அணியில் இருந்தும் அவரை கைவிட்டது.

சிறந்த துடுப்பாட்ட வீரரான பீட்டர்சனின் நீக்கம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் கூக் இங்கிலாந்து சபையின் முடிவை நியாயப்படுத்தி பீட்டர்சன் நீக்கம் சரியானதே என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி மூலம் எனது திறமையை யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை என்று பீட்டர்சன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்..

இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாட மாட்டேன். அங்கிருந்து விலகி இருப்பது எனக்கு நன்றாகவே இருக்கிறது. ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி விட்டேன் எனது திறமையை நிரூபிப்பதற்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை. யாருக்காவும் எனது திறமையை நிரூபிக்க தேவையில்லை என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.

ஏலத்தில் 9 கோடிக்கு பீட்டர்சனை வாங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை அணியின் அணித் தலைவராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.