தொடரும் சர்ச்சையில் சங்கக்கார, ஜெயவர்த்தன : ஆதரவளித்த ரணதுங்கா!!

459

Ranatungaசங்கக்கார, ஜெயவர்த்தன ஓய்வு விவகாரத்தில், அர்ஜூனா ரணதுங்க தனது ஆதரவை இருவருக்கும் தெரிவித்துள்ளார்.

T20 உலகக்கிண்ண போட்டி வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான சங்கக்காரவும், மஹேல ஜெயவர்த்தனவும் சர்வதேச T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர்.

இலங்கை அணியின் அடையாள வீரர்களான இருவரும் உலகக்கிண்ணம் முன்பாக தங்களது ஓய்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். இதகுறித்து தங்களுக்கு முன்கூட்டியே முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்று இலங்கை கிரிக்கெட் சபை புகார் கூறியது.

இதனால் வீரர்களுக்கும், கிரிக்கெட் சபைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல சர்ச்சைகள் எழுந்தது. இந்த விவகாரத்தில் இலங்கை அணி முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க கருத்து தெரிவிக்கும் போது, மற்றவர்களை விட வீரர்களுக்கு தான் ஓய்வு பற்றி சரியான முடிவை எடுக்கத் தெரியும்.

T20 கிரிக்கெட் என்பது இளைஞர்களுக்கான விளையாட்டு என்பதை கடந்த காலங்களில் பார்த்து இருக்கிறோம். எனவே அவர்கள் இருவரும் எடுத்த முடிவு சரியானது தான்.

T20 உலகக் கிண்ணத்தில் இளம் வீரர்களும், மூத்த வீரர்களும் ஒருங்கிணைந்து தங்களது பங்களிப்பை அளித்தனர் என்றும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவது எதிர்கால இலங்கை அணிக்கு சிறப்பாக அமையும் எனவும் கூறியுள்ளார்.