
குறும்பட இயக்குனராக இருந்த நலன்குமாரசாமிக்கு வெள்ளித்திரையில் வெளிவந்த சூதுகவ்வும் திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியை அளித்திருந்தது.
சூதுகவ்வும் படத்திற்கு பிறகு நலன்குமாரசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வந்தன. அப்போது சூர்யா மிகவும் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.
தற்போது அவருக்காக தயார் செய்த கதையில் மீண்டும் நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி, இப்படம் ஒரு காதல் கலந்த காமெடி படமாக எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் விஜய்சேதுபதியும் பிஸியாக இருப்பதால் இந்த கதை மூணாவது படமாக பண்ணலாம் என்று ஓரம் கட்டி விட்டார் இயக்குனர் நலன். மேலும் இதற்கிடையில் நலன்குமாரசாமி அவரது இரண்டாவது படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார், இப் படத்தில் புது முகங்களை வைத்து ஒரு திரில்லர் கலந்த காமெடி படமாக எடுக்கவுள்ளார் என தகவல் கசிந்துள்ளது. எப்படியோ இப்போது சூர்யா விட்ட இடத்தை விஜய் சேதுபதி பிடித்து விட்டார்.





