மீண்டும் நடிக்க வருகின்றார் ஜோதிகா!!

762

Jothika

ஜோதிகா மீண்டும் நடிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1991ல் ஜோதிகா சினிமாவில் அறிமுகமானார். குஷி, ரிதம், தெனாலி, தூள், காக்க காக்க, திருமலை, மன்மதன், சந்திரமுகி, மொழி உள்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

2006ல் ஜோதிகாவுக்கும், சூர்யாவுக்கும் திருமணம் நடந்தது. அதன்பிறகு சினிமாவை விட்டு விலகினார். தொடர்ந்து படவாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. சிலமாதங்களுக்கு முன் சூர்யா நிருபர்களிடம் கூறும்போது..

சினிமாவை விட்டு விலகும்படி ஜோதிகாவை நிர்ப்பந்திக்கவில்லை. குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் இருப்பதற்காக அவரே சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்க முடிவு எடுத்துள்ளார். நல்ல கதைகள் அமைந்தால் மீண்டும் நடிப்பார் என்றார்.

தற்போது சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து சொந்த கம்பனி பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹரி இப்படத்தை இயக்குகிறார். இதில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். ஜோதிகா முழு படத்திலும் வருகிறாரா அல்லது கௌரவ தோற்றத்தில் சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டி விட்டு போகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை.