பேஸ்புக் மசெஞ்சர் வசதியில் மாற்றம்!!

610

Messenger

மொபைல் சானங்களுக்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷனுடன் இணைந்து காணப்படும் பேஸ்புக் மசெஞ்சர் வசதியினை தற்போது தனியாக அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான அறிவித்தலை பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவுனரான Mark Zuckerberg உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இந்த மாற்றம் முதலில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் ஏனைய நாடுகளுக்கு விஸ்தரிக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் விரைவான குறுஞ்செய்தி சேவையினை வழங்கும் பொருட்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறப்பிட்டுள்ளார்.