
மனிஷா கொய்ராலா 1989ல் சினிமாவுக்கு வந்தார். தமிழில் பம்பாய் படம் மூலம் அறிமுகமானார். 1995ல் இப்படம் வந்தது, முதல்வன், பாபா, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார்.
மனிஷா கொய்ராலாவுக்கும் சாம்ராட் தஹால் என்ற தொழில் அதிபருக்கும் 2010ல் திருமணம் நடந்தது. 2012ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும் செய்து கொண்டனர். அதன் பிறகு மனிஷா கொய்ராலாவை புற்று நோய் தாக்கியது. அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். தற்போது குணமாகி இந்தியா திரும்பியுள்ளார்.
மனிஷா கொய்ராலா வாழ்க்கை வரலாறு படத்தில் இவை அனைத்தும் இடம் பெறுகிறது. இந்த படத்தை எடுப்பதற்கு மனிஷா கொய்ராலாவும் அனுமதி கொடுத்துள்ளார். இந்தியில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. மனிஷா கொய்ராலா பாத்திரத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது.





