கரீனா மீது கடுப்பில் உள்ள சூர்யா இரசிகர்கள்!!

443

Surya

சூர்யாவுக்கு கோபம் வந்ததோ இல்லையோ சூர்யாவின் இரசிகர்கள் பாலிவுட் நடிகை கரீனா கபூர் மீது படுகோவத்தில் இருக்கின்றனர்.

முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ம் திகதி பாலிவுட் நடிகை கரீனா கபூர் சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் என்ற தகவல் பரவியிருக்கிறது.

அறிவிக்கப்படாத இந்த செய்தியை சில வடஇந்திய ஊடகங்களும் உண்மை என்று நம்பி வெளியிட்டுவிட்டனர். இந்த தகவலை அறிந்த கரீனா கபூர் நான் தென்னிந்திய மொழியில் நடிக்கிறேன் என்று தவறான செய்தி பரவியிருக்கிறது. எனக்கு சூர்யா என்றால் யார் என்றே தெரியாது. பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி நல்ல மார்கெட்டை தக்வைத்துக்கொண்டிருக்கும் நான் ஏன் தென்னிந்திய மொழியில் நடிக்கவேண்டும் என்று சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

கரீனா கபூரின் இந்த அறிக்கையைப் பற்றி அறிந்த இரசிகர்கள், பங்குனி வெயிலைவிட அதிகமாக சூடாகிவிட்டனர். சூர்யா நடித்த கஜினி திரைப்படத்தை ஹிந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்து அமீர்கான் நடித்ததையும், அந்த திரைப்படம் வசூலில் பொலிவுட்டில் புதிய சாதனையை செய்ததையும் அறியாத நடிகையா பொலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் சூர்யா நடித்து வெற்றிபெற்ற சிங்கம் 2 திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கரீனா கபூர் தான் நாயகி.

பொலிவுட்டில் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்று சொல்லும் கரீனா கபூர், சிங்கம் 2 திரைப்படத்தின் ஒரிஜினல் படத்தைப் பற்றியும், அதன் நடிகர்களைப் பற்றியும் கேட்காமலேயேவா ஒப்புக்கொண்டார் என்று சமூக வலைதளங்களில் கரீனா கபூரை பந்தாடி வருகிறார்கள்.

மேலும் கரீனா கபூர் தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர் சூர்யாவின் இரசிகர்கள்