
சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள மான் கராத்தே 3 நாட்களில் 12 கோடி வசூலித்தது என்றெல்லாம் செய்திகள் பரவின. இந்நிலையில் இப்படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
தமிழ்நாடு தணிக்கைக்குழுவின் விதிப்படிதமிழில் பெயர் வைத்தால் 30 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும். அந்த வகையில் வரிவிலக்கு பெற்ற மான் கராத்தே திரைப்படத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதாவது கராத்தே என்பது ஜப்பானிய சொல் இதற்கு எப்படி வரிவிலக்கு அளிக்கலாம் என்றும் குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பது போன்ற காட்சிகள் உள்ளது எனவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள தயாரிப்புக்குழுவினருக்கு மற்றொரு தரப்பிலிருந்து இத்திரைப்படம் திருக்குறளை கேவலப்படுத்தியுள்ளது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
“ஆட்டலில் சிறந்த ஆட்டல் மாவாட்டல், அவ்வாட்டல் ஓட்டலில் ஆட்டப்படும் ”. காமத்துப்பால் என்றால் என்ன என்று கேட்கையில் அது ஆண் பால் + பெண்பால் கூட கொஞ்சம் பாதாம் பால் . அது தான் காமத்துப்பால்.
திருக்குறளை எழுதியவர் குறளரசன், வைரமுத்து இதுபோன்ற பல வசனங்கள் திருக்குறளையும், திருவள்ளுவரையும் கேவலப்படுத்தியுள்ளது என்று கடும் விமர்சனத்தை தமிழ் ஆதரவாளர்கள் முன்வைத்துள்ளனர்.





