கல்முனையில் இரண்டு பஸ்கள் மோதுண்டு விபத்து 3 பேர் பலி, 18 பேர் காயம்!!

578

கல்முனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட வீதி விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இரவு நேர தனியார் பஸ் ஒன்றும் மற்றும் ஒரு பயணிகள் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான போதே இந்த உயிர் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவம், கல்முனை அஷ்ரப் தேசிய மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றன.

சம்பவ நேரம் இரண்டு பஸ்களின் சாரதிகளும் மது அருந்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

1 2 3 4