உலகளவில் அமைதியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் ஐஸ்லாந்து, 8வது இடத்தில் கனடா!!

359

Canada people

உலகளவில் மக்கள் மிக அமைதியாக வாழ தகுதியான நாடுகள் எவை என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வினை Global Peace Index என்ற நிறுவனத்திற்காக IEP(Institute for Economics and Peace என்ற அமைப்பு எடுத்துள்ளது.

குறித்த நாடுகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் வன்முறை மற்றும் தீவிரவாத பயமின்றி மக்கள் வாழ்வதாகவும், அந்த நாட்டினால் பிற நாடுகளுக்கு எவ்வித பயமுறுத்தலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதில் கனடா 8வது இடத்தை பிடித்துள்ளது, பொதுமக்கள் சிறிதும் அமைதியின்றி வாழும் நாடாக ஆப்கானிஸ்தான் தெரிவு செய்யப்பட்டு கடைசி இடமான 162 வது இடத்தை பிடித்துள்ளது.

1. ஐஸ்லாந்து- 1.162
2. டென்மார்க்- 1.207
3. நியூசிலாந்து- 1.237
4. ஆஸ்திரியா- 1.250
5. சுவிட்சர்லாந்து- 1.272
6. ஜப்பான்- 1.293
7. பின்லாந்து- 1.297
8. கனடா- 1.306
9. சுவீடன்- 1.31
10. பெல்ஜியம்- 1.339