வவுனியாவில் விபத்து தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரின் புகைப்பட கருவிக்கு சேதம் விளைவிப்பு!!

3355

புகைப்பட கருவி சேதம்..

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (06.03.2022) காலை 9 மணியளவில் தனியார் பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துடன் விபத்துக்குள்ளான பேரூந்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினர்.

இவ்விடயம் தொடர்பில் காணொளிகளை பதிவு செய்த வவுனியா மாவட்ட ஊடகவியலாளரின் புகைப்பட கருவியினை அங்கிருந்தவர்களில் ஒருவர் பறித்து சேதப்படுத்தியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்திருந்தார்.

ஊடகவியலாளரின் புகைப்பட கருவிக்கு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிஸார் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரிடம் வாக்குமூலத்தினை பெற்றதுடன் சேதமடைந்த புகைப்பட கருவியினை சான்றுப்படுத்தினர்.

மேலும் சந்தேகநபர் தொடர்பில் ஊடகவியலாளர் வழங்கிய தகவலுக்கினங்க அவரை கைது செய்வதற்குறிய நடவடிக்கையினை தாம் முன்னெடுத்து வருவதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.