
நடிகர் சூர்யாவை அவமதிக்கவில்லை என்று கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார். சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் இந்தி நடிகை கரீனா கபூர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக செய்திகள் வந்தன. இது குறித்து மும்பையில் கரீனாகபூரிடம் நிருபர்கள் கேட்டபோது இதைா மறுத்தார்.
சூர்யாவை யார் என்றே எனக்கு தெரியாது என்றும், இந்தி தவிர வேறு மொழி படங்களில் நடிக்கமாட்டேன் என்றும் அவர் கூறியதாக செய்திகள் வெளியானது. இதனால் சூர்யா ரசிகர்கள் கொதிப்பானார்கள். கரீனா கபூருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
இதையடுத்து தனது பேட்டிக்கு கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது..
சூர்யாவை தெரியாது என்று நான் சொல்லவில்லை. அவரை சந்திக்கவில்லை என்றுதான் கூறினேன். எனது பேட்டி திரித்து வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரை நான் மதிக்கிறேன்.
அஞ்சான் படத்தில் ஒரு பாடலுக்கு நான் குத்தாட்டம் ஆடுவதாக செய்திகள் வந்ததால் அதற்கு மறுப்பு சொல்ல நேர்ந்தது. அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் இந்தி ரீமேக்கில் நான் நடித்து வருகிறேன். அப்படி இருக்க அவரை தெரியாது என்று எப்படி கூறுவேன்.
சூர்யா திறமையான நடிகர். இந்தி படத்தில் அவர் நடித்தால் நானும் அவரோடு இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கரினா கபூர் கூறினார்.





