
ரோமியோ ஜூலியட் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததுடன் சம்பளத்தையும் குறைக்க தயாராக இருந்த நயன்தாராவை விட்டுவிட்டு ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்ததாக இயக்குனர் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவிடம் துணை இயக்குனராக இருந்த லக்ஷ்மண் இயக்குனராகியுள்ளார். ஜெயம் ரவியை வைத்து அவர் எடுக்கும் படத்திற்கு ரோமியோ ஜூலியட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படம் குறித்து லக்ஷ்மண் கூறுகையில்,ஜெயம் ரவியிடம் நான் ரோமியோ ஜூலியட் கதையைக் கூறினேன். அவர் தனி ஒருவன் படப்பிடிப்பில் அந்த கதையை நயன்தாராவிடம் தெரிவித்துள்ளார்.
ரவி சொன்ன கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்த படத்தில் நானே நடிக்கிறேன். என் சம்பளத்தை கூட குறைத்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனி ஒருவன் படத்தை அடுத்தும் ரவியும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்வது நன்றாக இருக்காது என்று எனக்கு தோன்றியது. இதை நயன்தாராவிடம் தெரிவித்தேன் அவரும் புரிந்து கொண்டார்.
நயன்தாரா வேண்டாம் என்று நினைத்ததால் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தோம் என்றார் லக்ஷ்மண். ரவியும், ஹன்சிகாவும் ஏற்கனவே எங்கேயும் காதல் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





