தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இலங்கையர் இத்தாலியில் கைது!!

582

A7தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நபர்களை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
36 வயதான இலங்கையர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியின் மொன்டகல்வாரியோ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதல் இடம்பெறக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உணவு பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக கணவர் மனைவியைத் திட்டி வாக்குவாதம் செய்தாகவும், மனைவியின் சகோதரர்கள் இந்த வாய்த் தர்க்கத்தில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது ஆத்திரமுற்ற கணவர் மனைவியின் சகோதரர்களை கூரிய ஆயுதமொன்றில் தாக்கியுள்ளார். தாக்குதலில் காயடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.