மகளிர் தின விழாவும் புத்தக வெளியீடும்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் மகளிர் தின விழாவும் புத்தக வெளியீடும் மாவட்ட செயலக வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மாவட்டத்தில் தன்னப்பிக்கையால் தொழிலும் மக்கள் சேவைகளிலும் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் பல விடயங்களை வெளிக்கொணரும் ‘சாதனைக்காரிகைகள்’ புத்தக வெளியீட்டினை அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர வெளியீடு செய்ததுடன், விருந்தினர் உரை, அதிதிகள் உரை என்பனவற்றுடன் நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன், 2022 ஆம் ஆண்டிற்கான வர்த்தக கண்காட்சியும் சிறப்புற இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலகத்தின் ஊடாகவும் உள்ளூர் உற்பத்திகளையும் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கும் முகமாக குறித்த கண்காட்சி இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ. சரத்சந்திர தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உதவி அரசாங்க அதிபர் மகிந்தன் சபர்ஜா, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் லதா உதயமூர்த்தி,

தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர்களான எச்.எம்.மகிஸ் மற்றும் அசார்த் மற்றும் அரச, அரசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கண்காட்சியில் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றனர்.





