உலகக்கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி இணையத்தில் புதிய சாதனை!!

311

SL

T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர்.

இணையதளத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்றை இவ்வளவு ரசிகர்கள் பார்த்திருப்பது இதுவே முதன்முறையாகும். இப்போட்டியில் இலங்கை அணி முதன்முறையாக T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. சமீபத்தில் முடிவடைந்த T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அனைத்தும் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்பானது.

பணம் கட்டும் வாடிக்கையாளர்கள் போட்டியை இணையதளத்தில் நேரடியாக பார்க்க முடியும். மற்றவர்களுக்கு சுமார் 5 நிமிடம் தாமதமாக போட்டி ஒளிபரப்பட்டது.

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்த இணையதளத்தில் 19.3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியில் பெங்களூர் மற்றும் புனே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை 14.8 லட்சம் பேர் இணையதளத்தில் பார்த்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.