சமந்தாவின் வளர்ச்சியால் குமுறும் நடிகைகள்!!

493

Samantha

சமந்தா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் ‘பாணா காத்தாடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். நான் ஈ படம் மேலும் பிரபலபடுத்தியது. தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தற்போது தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. விஜய் ஜோடியாக கத்தி படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இதை இயக்குகிறார். சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்தில் நடிக்கிறார். லிங்குசாமி இதை இயக்குகிறார்.

இப்படங்களை தொடர்ந்து விக்ரம் ஜோடியாகவும் நடிக்கிறார். இந்த படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். மேலும், பல படவாய்ப்புகள் குவிகிறது.

விஜய், சூர்யாவுடன் நடிக்கும் படங்கள் வெளியானதும் சமந்தா மார்க்கெட் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார். சமந்தாவின் வளர்ச்சி சக நடிகைகளுக்கு தவிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மார்க்கெட்டை சரிப்பதாக குமுறுகிறார்கள்