பிரிட்டனின் வயது குறைந்த பெற்றோர் : தாய்க்கு 12வயது, தந்தைக்கு 13 வயது!!

715

Couplesபிரிட்டனில் மிக குறைந்த வயதில் 12 வயது பெண்ணும், 13 வயது ஆணும் தாய்- தந்தை ஆகியுள்ளனர். பிரிட்டனில் மிக குறைந்த வயதில் அதாவது மாணவர் பருவத்தையே தாண்டாத இருவர் பெற்றோர் ஆகியுள்ளனர்.

இவர்களது பெயர் வெளியிடப்படவில்லை, கடந்த 2012ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தையட்டி இவ்விருவரும் சந்தித்து கொண்டனர். சிறுமிக்கு அப்பொழுது வயது 10, சிறுவனுக்கு வயது 12. இவர்கள் இருவரும் ஒரு வருடமாக சந்தித்து தங்களது காதலை வளர்த்துள்ளனர்.

அதன் பின்னர் அந்த சிறுமி தனது 11வது வயதில் கர்ப்பிணியாகி உள்ளாள். கடந்த வாரம் பெண் குழந்தைக்கு தாயான அந்த சிறுமி நேற்று தனது தாய் மற்றும் மற்றொரு பெண்ணுடன் சென்று பதிவாளர் அலுவலகத்தில் குழந்தை பிறப்பை பதிவு செய்துள்ளார்.

அந்த குழந்தை 7 பவுண்டு எடையுடன் உள்ளது. இங்கிலாந்தில் மிக குறைந்த வயதில் தாயான ட்ரெசா மிடில்டனை விட தற்பொழுது தாயாகியுள்ள சிறுமி 5 மாதங்கள் இளையவள். குறித்த சிறுமியின் தாய், மிக குறைந்த வயதில் பாட்டியாகி உள்ளார்.