யுவதியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்!!

562

Jailதிருகோணமலை, குச்சவெளி ஜயாநகர் பகுதியில் யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

23 வயதான யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் குச்சவெளி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

திருகோணமலை பதில் நீதவான் ரி. திருச்செந்தில்நாதன் முன்னிலையில் சந்தேகநபர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குச்சவெளியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.