அனுஷ்கா தான் என் மனைவி : விராத் கோலி!!

534

Anuska

ஐ.பி.எல் விருந்தில் நடிகர் ஷாரூக்கான் நடத்திய ஜாலியான சுயம்வரம் நிகழ்ச்சியில் நடிகை அனுஷ்கா ஷர்மாவை, விராத் கோலி மனைவியாக தெரிவு செய்துள்ளார்.

அபுதாபில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு ஐ.பி.ல் விருந்து அரங்கேறியது. ஆடல், பாடல் என அன்றைய தினம் கலைகட்டியது, இந்தி நடிகை தீபிகா படுகோனே தான் நடித்த பல்வேறு படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு கலக்கலாக நடனமாடி உற்சாகப்படுத்தினார்.

ராஜஸ்தான் ரொயல்ஸ் அணித்தலைவர் ஷேன் வட்சன் கிட்டார் வாசித்தபடி பாட்டு பாடினார். இந்திய அணித்தலைவர் டோனி, ஷாரூக்கானுடன் இணைந்து கலக்கினார். இருப்பினும் நடிகர் ஷாரூக்கானும் நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சி தான் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது.

ஷாரூக்கான், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும், பெங்களூர் ரொயல் சேலஞ்சர்ஸ் அணியின் அணித்தலைவரான விராத் கோலியை மேடைக்கு அழைத்து சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தினார்.

இதில் சமுக வலைதளங்கள் மூலம் கோலிக்கு வந்த ஏராளமான காதல் அழைப்புகளில் இருந்து 8 மங்கைகளின் புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் பிடித்த மங்கையை வாழ்க்கை துணைவியாக தெரிவு செய்யும்படி கோலிடம், ஷாரூக் கூறியுள்ளார்.

அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்து காத்திருந்த வேளை அவர் அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படத்தை தெரிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன் மூலம் அனுஷ்கா ஷர்மாவை காதலிக்கிறேன் என்பதை ஒப்புக் கொண்டு விட்டாரா அல்லது இது வெறும் ஜாலிக்கு மட்டும் தானா என்று புரியாமல் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.