ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!!

2574

இருவர் நீரில் மூழ்கி பலி..

வாரியபொல குருணவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் நேற்றைய தினம் வாவியில் நீராடச்சென்ற வேளை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூத்த சகோதரர் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், இவர் கடற்படையில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரது இளைய சகோதரர் கித்சிறி அசேல, 34 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது. இதன்போது உயிரிழந்தவர்களின் சடலங்கள் வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.