ஜில்லா 100வது நாள் வெற்றி விழா : விஜய் பங்கேற்பு!!

549

Jilla

விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜில்லா. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார்.

தமிழில் வெற்றியடைந்துள்ள ஜில்லா படம் தற்போது 100வது நாளை எட்டியுள்ளது. 100வது நாளை கொண்டாடு விதமாக விழா ஒன்றை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இவ்விழாவை சென்னை அல்பட் திரையரங்கில் வருகிற ஏப்ரல் 18ம் திகதி நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்கிறார்கள். மேலும் இவ்விழாவில் நினைவு பரிசுகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.