விஜய் – அமலாபால் நிச்சயதார்த்தம் கொச்சியில்!!

264

Vijay - Amala Paul

இயக்குனர் விஜய்க்கும் நடிகை அமலாபாலுக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது இந்த காதல் விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படத்தில் நாயகியாக நடித்தார். இவர்களது காதல் விவகாரம் பற்றி ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அதை மறுத்தனர்.

இப்போது அமலாபாலே அதனை பகிரங்க படுத்திவிட்டார். விஜய் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் எங்கள் எதிர்காலம் குறித்து அறிவிப்பேன் என்று அறிக்கை வெளியிட்டார். இவர்கள் காதலை அமலாபாலின் தாயும் உறுதிபடுத்தி உள்ளார்.

அவர் கூறும்போது அமலாபால் அடிக்கடி விஜய்யுடன் போனில் பேசி வந்தார். இதை வைத்து இருவரும் காதலிப்பதை தெரிந்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.

தற்போது விஜய் வெளிநாட்டில் இருந்து திரும்பி விட்டார். இதையடுத்து திருமண ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இருவருக்கும் கொச்சியில் அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது திருமண திகதியை முடிவு செய்கின்றனர். சென்னையில் திருமணம் நடக்க உள்ளது.