சாரதியின் தூக்கத்தால் ஆற்றில் விழுந்த வாகனம் : 5 பேர் பலி!!

547

Accidentகண்டியிலிருந்து கதிர்காமம் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமம் தெட்டகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனம் வீதியை விட்டு விலகி தெட்டகம ஆற்றில் வீழ்ந்துள்ளது. வாகன சாரதி உறங்கியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் உயிரிழந்துள்ளனர். ஐந்தரை வயதான குழந்தையொன்று விபத்தில் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.