தோல்வியிலும் சாதனை படைத்த ரெய்னா, மக்கலம்!!

453

Raina

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக சென்னை அணி தோல்வியடைந்த போதும், அந்த அணியின் வீரர்களான ரெய்னா, மக்கலம் புதிய சாதனைகளை புரிந்துள்ளனர்.

ஐ.பி.எல் தொடர் 2008ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இதுவரை ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றுள்ளது.

இதில் சென்னை அணி 59 வெற்றியும், 39 தோல்வியும் கண்டுள்ளது. இதில் ஒரு ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது, மற்றொரு ஆட்டத்தில் முடிவு இல்லை. இந்த வரிசையில் 2வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி (96 ஆட்டம், 56 வெற்றி, 40 தோல்வி) உள்ளது.

அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் இது 100வது ஆட்டமாகும். இதன் மூலம் ஐ.பி.எல் 100 ஆட்டத்தில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சிறப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

அவர் இதுவரை 2,826 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதிக ஆட்டங்களில் கலந்து கொண்டவர்களின் வரிசையில் ரோகித் ஷர்மா 98 ஆட்டங்களுடன்(மும்பை அணி) 2வது இடம் வகிக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களம் இறங்கிய நியூசிலாந்தை சேர்ந்த பிரன்டன் மெக்கல்லம் 24 ஓட்டங்கள் எடுத்த போது, சர்வதேச, உள்ளூர் என்று ஒட்டுமொத்த T20 கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 4வது வீரர் என்ற சாதனைக்குரியவர் ஆனார்.