பரீட்சையில் தோல்வி… மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

921

திருவேற்காட்டில்..

திருவேற்காட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவேற்காடு பகுதியில், 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்டார். தமிழ்-கணிதம் ஆகிய பாடங்களில் தோல்வி அடைந்ததால், இந்த விபரீத முடிவை எடுத்தது தெரிய வந்துள்ளது.

சென்னை, திருவேற்காடு, வி.ஜி.எஸ் நகரை சேர்ந்தவர் வினோத். இவரின் மகன் திவாகர் (18). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து, அதற்கான பொதுத்தேர்வு எழுதினார்.

சமீபத்தில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், திவாகர், தமிழ், கணிதம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், அவர் மன உளைச்சலில் காணப்பட்டார்.

இந்நிலையில், நேற்று, அவரின் பெற்றோர் வெளியில் சென்றனர். திவாகர் மட்டும் வீட்டில் இருந்தார். இரவு, அவரின் பெற்றோர் வீடு திரும்பினர். அங்கு ஒரு அறையில், திவாகர் தூக்கில் பிணமாக கிடந்தார்.

இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து மகனின் சடலத்தை பார்த்து கதறி துடித்தனர். பின்னர் புகாரின் பேரில், திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து, மாணவன் உடலை கைப்பற்றி, அவர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.