எரிபொருள் விநியோகம்..

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று (08.07) மற்றும் நாளை (09.07) விநியோகிப்பதற்கான எரிபொருளை இடைநிறுத்துவதற்கு லங்கா ஐ.ஓ.சி (IOC) தீர்மானித்துள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு லங்கா IOC தொடர்ந்து எரிபொருளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும், நாளையும் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே குறித்த விடயத்தை லங்கா ஐஓசி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்றும், நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதால் முக்கிய இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதுடன், லங்கா ஐ.ஓ.சி தற்போது பொது மக்களுக்கும் எரிபொருளை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





