
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். பிரசாரத்தின் இடையே மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதீர் சவுதாரியுடன் இனிப்பு சாப்பிட கடை ஒன்றிற்கு சென்றபோது ராகுலை அருகில் பார்த்த ஆண் தொண்டர் ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்து மகிழ்ச்சியில் ராகுலை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
இதனால் தர்மசங்கடத்திற்குள்ளான ராகுல் சிறிது நேரம் கழித்து பின்னர் மீண்டும் பிரச்சாரத்தைத் தொடர்ந்துள்ளார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் அசாமில் பெண் தொண்டர் ஒருவர் ராகுலுக்கு முத்தமிட்டதால் சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.





