தீவிரமடையும் போராட்டம்..

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரையில் 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பொது மக்கள் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய சம்பவங்களில் காயமடைந்த 33 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இலங்கையில் நடப்பது என்ன| கப்பல் மற்றும் விமான தளங்களுக்கு அதிஉயர் பாதுகாப்புடன் சென்றது யார்





