திரை உலகினரை ஆச்சரியபட வைத்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!!

570

Santhanam

சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். இவர்களுடன் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். சித்தார்த் இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிப்பதற்கென தீவிர எடை குறிப்பில் ஈடுபட்டு இருபது வயது இளைஞன் போல் மாறியுள்ளார். மேலும் நடனம், சண்டை பயிற்சிகளையும் மேற்கொண்டு உள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் படத்தின் முன்னோட்டம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் யூடியூப்பில் 5 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டி திரை உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு சந்தானத்தை சக கதாநாயகர்களுடன் சம அளவில் பொருத்தியுள்ளது.