பாட்ஷா பாணியில் அஞ்சான்!!

505

Anjan

சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் அஞ்சான் இப்படத்தை லிங்குசாமி தான் இயக்கி வருகிறார். லிங்குசாமி ரஜினியின் தீவிர ரசிகர் என்று எல்லாருக்கும் தெரியும்.அவர் பாட்ஷா மாதிரி ஒரு படம் எடுத்தால் தான் என் மனம் நிம்மதி அடையும் என்று அவரே ஒரு பேட்டியில் சொன்னார்.

அதற்கு காலம் வந்து விட்டது. அஞ்சான் படம் தற்போது மும்பையில் படமாக்குகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இதில் ருசிகர தகவல் என்னவென்றால் இது அப்படியே பாட்ஷா படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறது.

அதில் ரஜினி சாதரண மாணிக்கமாக இருந்து தன் நண்பர் கொலை செய்ய படுவதை கண்டு பாட்ஷாவாக விஸ்வரூபம் எடுப்பார்.அதே போல் தான் இதிலும் சூர்யா தன் நண்பர் கொலைக்காக பழி வாங்குகிறார்.இதில் இவர் நண்பனாக நடிப்பது துப்பாக்கி வில்லன் வித்யு ஜம்வால் தான்.

ஹிந்தி நடிகர் மனொஜ் பஜ்பாய் ரகுவரன் கதாபத்திரத்தில் நடிக்கிரார்.
மேலும் இப்படத்தில் சமந்தா முதன் முறையாக சூர்யாவுடன் கைக்கோர்த்துள்ளார்.இதில் சூர்யா இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.