கனடாவில்..
இளைஞர் ஒருவர் கட்டிபிடித்தலை தொழிலாக செய்ய, ஒரு மணி நேரம் கட்டிப்பிடிக்க இந்திய மதிப்பில் ரூ. 7000 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி வரும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகில் அனைத்து விதமான மனிதனின் தேவையான விஷயங்களுக்கு கூட இயந்திரம் வந்துவிட்டது. மனிதனை உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்து வேலையையும் செய்யும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது.
அந்த வகையில், மக்களின் தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளுக்கு, தொழில் வாய்ப்புகளுக்கு அடித்தளமாக அமைகிறது. சமீபகாலமாக மக்கள் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதால், அவற்றிற்கான சாதாரண தீர்வுகளைக்கூட தொழிலாக மாற்ற ஆரம்பித்து விட்டனர் சிலர்.
அப்படி தான் கனடாவை சேர்ந்த 30 வயதான ட்ரெவர் ஹூடன் என்பவர் தான் கட்டிப்பிடி சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், கட்டிப்புடி சிகிச்சை, இணைப்புப் பயிற்சி மற்றும் மசாஜ்கள் வழங்கப்படுகிறது.
ஒரு மணிநேர வருமானம்
மேலும், ஒரு மணி நேர கட்டிப்பிடி பணிக்கு 75 பவுண்ட் கட்டணம் வசூலிக்கிறார். இந்திய மதிப்பில் இது ரூ. 7000 ஆகும். கட்டிப்பிடிப்பதற்கு இவ்வளவு கட்டணமா என ஆச்சர்யப்பட்டு கேட்வர்களிடம், இந்தக் கட்டிப்புடி சிகிச்சை மூலம் பல வகையில் மக்களின் மன வாழ்வு மேம்படுத்துவதாகக் கூறுகிறார் ட்ரெவர்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், முதலில் மக்களுக்கு, முன்பின் தெரியாத ஒருவர் தன்னைக் கட்டிப்பிடிப்பதில் உடன்பாடு இருக்காது. அதனால் கூச்சப்படுவார்கள். இதற்கு அவர்கள் தாங்களாகவே அன்பு காட்ட, அக்கறை காட்ட அரவணைக்க ஒரு மணி நேரம் இருக்கிறதா? என்னை சந்திக்கும் முன் கேட்டுக்கொண்டால் சரியாகிவிடும் என தெரிவிக்கிறார்.
மேலும், இந்த அரவணைப்பு தெரபி பற்றி இன்னமும் மக்களிடம் விழிப்புணர்வு தேவை, பலர் இதனை பாலியல் தொழில் என தவறாகப் புரிந்து கொள்கின்றனர் எனக் கூறுகிறார்.